
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த ஹைதராபாத் அணி மீண்டும் தங்களுடைய வெற்றி பாதைக்கும் திரும்பியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய பாட் கம்மின்ஸ்,”இந்த போட்டியில் வெற்றிபெற்றது அற்புதமானது. இது எங்கள் பாணிக்கு ஏற்றது, நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். இது ஒரு நல்ல விக்கெட், பந்து இங்கே சுழன்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற விக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரில் 10 ரன்களுள் வீசியிருந்தல் அது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியைப் போல் உணரலாம்.
இந்த ஸ்கோரைத் துரத்தும்போது நீங்கள் அரை நம்பிக்கையுடன் இருப்பது ஒருவித பைத்தியக்காரத்தனம். அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கிற்கு நான் பெரிய ரசிகர். மேலும் நாங்கள் எங்களுடைய செயல் முறையில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. கடந்த ஆண்டு பேட்டிங் குழு நன்றாக விளையாடியது, அவர்களின் திறமைகளில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் எஞ்சியுள்ள போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.