Advertisement

இனி அனைத்தும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது - விராட் கோலி குறித்து அருண் துமல்!

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுப்பது குறித்தான தங்களது நிலைப்பாட்டை பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ளார்.

Advertisement
We Leave It Up To Selectors But Hope He Gets Back To Form Soon- BCCI Official On Whether Virat Kohli
We Leave It Up To Selectors But Hope He Gets Back To Form Soon- BCCI Official On Whether Virat Kohli (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 05, 2022 • 12:03 PM

சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 05, 2022 • 12:03 PM

இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐயும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

Trending

விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்துள்ள விராட் கோலி, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரிலாவது தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

என்னதான் ரசிகர்கள் விராட் கோலியின் மீது முழு நம்பிக்கை வைத்து காத்திருந்தாலும், விராட் கோலிக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்து வரும் நிலையில், விராட் கோலி குறித்தான பிசிசிஐயின் நிலைப்பாடு என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரியான அருண் தோமல், “இனி அனைத்தும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது. விராட் கோலி சாதரண வீரர் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. 

விராட் கோலி என்றுமே இந்திய அணி லெஜண்ட் தான். அவருக்கு இனி இந்திய அணியில் இடம் கொடுப்பது குறித்தான அனைத்து முடிவுகளையும் இந்திய அணியின் தேர்வாளர்கள் தான் எடுப்பார்கள், அதில் நாங்கள் தலையிடூவதற்கு ஒன்றும் இல்லை. விராட் கோலி முடிந்த வரை வெகு விரைவாக பழைய ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement