இதே உத்வேகத்தை மற்ற போட்டிகளுக்கும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த சீசனின் முதல் ஆட்டத்திலேயே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெர்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஜ்சாப் கிங்ச் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இபோட்டியில் டாஸை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஃபினிஷர் ஷஷாங்க் சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 243 ரன்களைக் குவித்தது. இதில் அதிக பட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்களையும், ஷஷாங்க் சிங் 44 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் 74 ரன்களையும், ஜோஸ் பட்லர் 54 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 46 ரன்களையும் சேத்தும் கூட அந்த அணி 20 ஓவர்களில் 232 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராட் டைட்டன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “இந்த சீசனின் முதல் ஆட்டத்திலேயே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. நான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்தேன், அது எனக்கு ரன்களைச் சேர்க்க உதவியது. ஷஷாங்க் 16-17 பந்துகளில் எடுத்த 44 ரன்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவை. நாங்கள் அதற்கு ஒரு அளவுகோலை அமைத்தோம்.
Also Read: Funding To Save Test Cricket
பனியின் தாக்கம் இருக்கும் சமயத்தில் நிலைமைகள் மாறக்கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக வைஷாக் விஜயகுமார் சிறப்பாக செயலப்ட்டார். அதேசமயம் அர்ஷ்தீபும் சிங்கும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன் சாய் சுதர்ஷனின் விக்கெட்டையும் கைப்பற்றி எங்களுக்கு ஒரு வழியை உருவாக்கி கொடுத்தார். மைதானத்தில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் அணி வீரர்கள் அனைவரும் உறுதியுடன் இருந்தனர். இதே உத்வேகத்தை மற்ற போட்டிகளுக்கும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now