
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.டாக்காவில் நடைபெறவுள்ள இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், பேட்டர்கள் துவக்கம் முதலே ரன்களை குவிக்க திணறினார்கள். இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 7 ரன்களை மட்டுமே சேர்த்தார். அடுத்து விராட் கோலி 9, ரோஹித் சர்மா 27, ஷ்ரேயஸ் ஐயர் 24 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து கேஎல் ராகுல் 70 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்களை சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். அடுத்து, வாஷிங்டன் சுந்தரும் (19) ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 41.2 ஓவர்களில் 186/10 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.