நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடவில்லை - ஹர்திக் பாண்டியா!
இப்போட்டியில் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக எங்கள் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள் அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அரை சதம் கடந்ததுடன் 59 ரன்களையும், அணியின் நட்சத்திர வீரர்கள் ரியான் ரிக்கல்டன் 41 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும், நமன் தீர் 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Also Read
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 89 ரன்களையும், அபிஷேக் போரால் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது, குறிப்பாக இது போன்ற வெற்றிகள். கருண் நாயர் இப்போட்டியில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் விளையாடும் போது போட்டி எங்களின் கையை விட்டுப் போவது போல் தோன்றியது. ஆனால் பின் அவரது விக்கெட்டை வீழ்த்திய பிறகு எங்களுக்கு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை வந்தது.
Also Read: Funding To Save Test Cricket
கரண் சர்மா இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் 60மீ பவுண்டரி எல்லைகள் இருக்கும் போது அவர் இப்படி செயல்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் ஒருபோதும் எங்களின் நம்பிக்கையை கைவிடவில்லை, போட்டியில் இருக்க விரும்புகிறோம் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். இப்போட்டியில் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக எங்கள் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now