பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆர்சிபி நிர்வாகம்!
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதித்துள்ளது.
இதனையடுத்து நேற்றைய தினம் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கான பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பங்கேற்க ரசிகர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியில் திரண்டிருந்தனர். மேலும் ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பல்வேறு வாயில்களிலும் நுழைய முயற்சித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டத்து.
அப்போது ஏற்றபட்ட கூட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கு அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருவதுடன், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் எனவும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் மருத்துவ செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். இருப்பினும் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததன் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கர்நாடக அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆர்சிபி அணி தங்களுடைய எக்ஸ் பதிவில், “துயரமான உயிரிழப்பிற்கு ஆர்சிபி நிர்வாகம் இரங்கல் தெரிவிக்கிறது மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. நிலைமை குறித்து அறிந்தவுடன், நாங்கள் எங்கள் திட்டத்தை உடனடியாக திருத்தி உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம்.
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 4, 2025
We are deeply anguished by the unfortunate incidents that have come to light through media reports regarding public gatherings all over Bengaluru in anticipation of the team’s arrival this… pic.twitter.com/C0RsCUzKtQ
Also Read: LIVE Cricket Score
ஆர்சிபி அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூரு முழுவதும் பொதுமக்கள் கூட்டம் தொடர்பாக ஊடக அறிக்கைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் அனைத்து ஆதரவாளர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now