நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் - ரிஷப் பந்த்!
இது கிரிக்கெட், சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கும், சில சமயங்களில் அவை நடக்காது, நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிக்கோலஸ் பூரன் 45 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறவினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 39 ரன்களையும், இஷான் கிஷன் 35 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த், “நிச்சயமாக இது எங்கள் சிறந்த சீசன்களில் ஒன்றாக இருந்திருக்கலாம், ஆனால் தொடருக்குள் வரும்போது எங்களுக்கு நிறைய இடைவெளிகள், காயங்கள் இருந்தன, ஒரு அணியாக அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் அந்த இடைவெளிகளை நிரப்புவது எங்களுக்கு கடினமாகிவிட்டது. நாங்கள் ஏலத்தைத் திட்டமிட்ட விதம், அதே பந்துவீச்சு இருந்திருந்தால் எங்களின் ஆட்டம் வேறு விதமாக இருந்திருக்கும்.
ஆனால் இது கிரிக்கெட், சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கும், சில சமயங்களில் அவை நடக்காது, நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம், மேலும் எதிர்மறையான பக்கத்தை விட சீசனின் நேர்மறைகளை எடுத்துக்கொள்கிறோம். எங்களிடம் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது, போதுமான ஃபயர்பவர் உள்ளது, அதுதான் சீசனுக்கு மிகப்பெரிய நேர்மறை, பந்து வீச்சாளர்களுக்கு கூட பல முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
மேலும் இந்த விக்கெட்டில் நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். சீசனின் முதல் பாதியில் நாங்கள் மிகவும் நன்றாக விளையாடினோம், ஆனால் இரண்டாவது பாதியில் பிரகாசமான பக்கத்தில் உள்ள அணிகளை எதிர்கொள்வது கடினமாக மாறியது. திக்வேஷ் ரதி சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த சீசன் முழுவதும் அவர் பந்து வீசிய விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் நீங்கள் உங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now