
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 26ஆம் தேதி கராச்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்று பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது!
கேப்டன் பாபர் ஆஸமின் சதம், மீண்டும் அணிக்குள் வந்த முன்னாள் கேப்டன் சர்பராஸ் கான் அரை சதம் ஆகியவற்றால் பாகிஸ்தான் அணி 438 ரன்கள் சேர்த்தது. இதை அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனின் இரட்டை சதம் மற்றும் டாப் லாதமின் சதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 612 ரண்களை ஒன்பது விக்கெட் இழப்பிற்கு டிக்ளேர் செய்தது.
இதை அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி ஐந்தாவது நாளான நேற்று ஆரம்பத்தில் சரிவை சந்தித்தாலும் இமாம் உல் ஹக் மற்றும் சர்ப்ராஸ் கானின் அரை சதங்களால் மீண்டது. ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது கேப்டன் பாபர் திடீரென்று 15 ஓவருக்கு 138 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் என்று நியூசிலாந்து அணிக்கு ஒரு வாய்ப்பை அளித்து அதிர்ச்சி கொடுத்தார்.