நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த போட்டியில் எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதமும், நாங்கள் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று தொடங்குகிறது. அதன்படி நேற்று குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் மெஹிதி ஹசன் மிராஸ், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Trending
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணியானது 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 35 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 27 ரன்களையும் சேர்த்தனர் இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைபற்றினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமர் யாதவும் 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சனும் 29 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்திக் பாண்டியா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும், நிதீஷ் குமார் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “நாங்கள் எங்கள் அணியின் இளம் வீரர்களை ஆதரிக்க முயற்சித்தோம் மற்றும் எங்கள் குழுவின் ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோமோ அது எங்களுக்கு பலனளித்தது. இந்த போட்டியில் எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதமும், நாங்கள் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் உங்களிடம் நிறைய விருப்பங்கள் இருக்கும் சயமத்தில் யாரை பந்துவீச அழைப்பது என்பது நல்ல தலைவலியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் உங்கள் அணியில் கூடுதல் பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்ல விஷயமாகும். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் புதிதாக ஏதோ ஒன்றை கற்றுக்கொள்கிறீர்கள். அதனால் நீங்கள் மேபடுத்த எப்போது ஏதேனும் ஒன்று உள்ளது. அடுத்த ஆட்டத்தில் நாங்கள் உட்கார்ந்து அதைப் பற்றி பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now