சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் விளையாட விரும்புகிறோம் -ரிஷப் பந்த்!
ஷர்தூல் தாக்கூர் ஒரு அற்புதமான வீரர். இப்போது அவர் ஒரு அற்புதமான தேர்வு என்று நான் சொல்ல முடியும். நாம் அவரை ஆதரிக்க வேண்டும் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் 60 ரன்களிலும், ஐடன் மார்க்ரம் 53 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய ஆயூஷ் பதோனியும் 30 ரன்களையும், டேவிட் மில்லர் 27ரன்களையும் சேர்த்தனர்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 203 ரன்களைக் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 67 ரன்களையும், அதிரடியாக விளையாடிய நமன் தீர் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரிஷப் பந்த், “ஒரு விஷயம் நிச்சயம், விக்கெட் நன்றாக இருந்து. அதனால் இங்கு எங்களுக்கு எது வேலை செய்கிறது, எது வேலை செய்யவில்லை என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் மிகவும் எளிமையானது. முன்பு நாங்கள் வேறு வகையான விக்கெட்டை விரும்பினோம், ஆனால் எங்களுக்கு என்ன வழங்கப்பட்டாலும் எந்த விக்கெட் வழங்கப்பட்டாலும் அதில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.
மிட்ச் மார்ஷ் போன்ற ஒரு வீரர் எங்களுக்கு அத்தகைய தொடக்கத்தை வழங்கும்போது, அது நடுத்தர வரிசைக்கு நேரம் அளிக்கிறது. அதுதான் எங்களின் திட்டமாகவும் இருந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் விளையாட விரும்புகிறோம், நமக்குக் கிடைத்த தொடக்கம் நம்மை நல்ல நிலையில் வைத்திருக்கிறது. ஷர்தூல் தாக்கூர் ஒரு அற்புதமான வீரர். இப்போது அவர் ஒரு அற்புதமான தேர்வு என்று நான் சொல்ல முடியும். நாம் அவரை ஆதரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now