
இலங்கையில் நடைபெற்று முடிந்த மகளிர் டி20 அசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
அதன்படி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஆகஸ்ட் 11 முதல் 16ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முன்னோட்டமாக இலங்கை அணி இத்தொடரை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய அயர்லாந்து அணி கேப்டன் லாரா டெலானி, நாங்கள் ஒரு அணியாக பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.