
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 74 ரன்கள் அடித்தார். அடுத்த அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 29 ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்திருந்தது லக்னோ அணி. பந்து வீச்சில் ஷாம் கர்ரன் அசத்தினார். ஷிகர் தவான் காயம் காரணமாக இன்றைய போட்டியில் இல்லாததால், ஷாம் கர்ரன் தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.
இதையடுத்து 160 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனதால், உள்ளே வந்த மேத்தியூ ஷாட் 34 ரன்கள் அடித்து அவுட்டானார். சிக்கந்தர் ராசா மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச்சென்று ஆட்டமிழந்தார். ராசா அவுட்டானாலும், களத்தில் நின்ற ஷாருக் கான், அணிக்காக கடைசிவரை நின்று 10 பந்துகளில் 2 சிக்சர்ஸ் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் அடித்து போட்டியை பினிஷிங் செய்தார். இது வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியது. இறுதியில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
போட்டி முடிந்தபின் பேட்டியளித்த லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், “நாங்கள் ஒரு பத்து ரன்கள் குறைவாக அடித்திருந்தோம். மேலும் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் அது பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக உதவி இருக்கிறது. அத்துடன் பந்துவீச்சிலும் எங்களது தரத்திற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படவில்லை.