 
                                                    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது 26 வயதாகும் அர்ஷ்தீப் சிங் தற்போது இந்திய அணியின் நம்பர்-1 டி20 பந்து வீச்சாளராக உள்ளார். அவர் டி20 கிரிக்கெட்டில் 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளர். மேலும் அவர் 21 முதல் தர போட்டிகளில் விளையாடி 37 இன்னிங்ஸ்களில் 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா இல்லையா என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதுமட்டுமின்றி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        