Advertisement

சிஎஸ்கேவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை தான்- ருதுராஜ் கெய்க்வாட்!

சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒரு பழக்கம் இருக்கிறது. அதுதான் வீரர்கள் மத்தியில் நல்ல மனநிலையை கொண்டு வருகிறது என்று ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

Advertisement
We would like to play on any surface, says CSK batter Ruturaj Gaikwad
We would like to play on any surface, says CSK batter Ruturaj Gaikwad (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 07, 2023 • 04:15 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய, பலரும் எதிர்பார்த்த போட்டி ஒரு தலைப்பட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பக்கம் முடிந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி தட்டுத்தடுமாறி 139 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 07, 2023 • 04:15 PM

போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து மிகச்சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்த ருத்துராஜ் கெய்க்வாட், போட்டி முடிந்த பிறகு அணியில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அப்போது தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் வீரர்களை எப்படி ட்ரீட் செய்கிறார்கள்? என்பது பற்றி பேசினார். 

Trending

இதுகுறித்து பேசிய அவர், “சிஎஸ்கே அணியை பொறுத்தவரை, பிளேயிங் லெவனில் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை பொறுத்து மரியாதை கிடையாது. அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை தான். மேலும் சிஎஸ்கே அணியினர் உங்களிடம் வந்து, இந்த சூழலில் நீ இருந்திருந்தால் எப்படி கையாண்டு இருப்பாய்? என்று உங்களை சிந்திக்க வைப்பார்கள். அதன் மூலம் பல வகைகளில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். அணியின் மத்தியில் நல்ல சூழல் நிலவுகிறது. இதுதான் பிளேயிங் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் இந்த அணியுடன் பயணிக்க வைக்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement