
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி ஓபனிங் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 41 (33), டிவோன் கான்வே 87 (49) இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இதையடுத்து வந்த ஷிவம் துபேவும் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 32 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். தோனி 21 (8 பந்துகள்), பிராவோ 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
முன்னதாக ஆன்ரிச் னோஒர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் மொயீன் அலி (9 ரன்கள்), உத்தப்பா (டக் அவுட்) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய டுவைன் பிராவோ, ஹாட்ரிக் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். பிராவோ தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிங்கிள் தட்டிவிட்டு தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.