
West Indies Announces Squad For ODI Series Against Australia (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணி கடந்த மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் சென்று பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதி காரணமாக மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்படாமல் இருந்த சிம்ரன் ஹெட்மையர், ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ் ஆகிய மூவரும் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.
ஒருநாள் தொடருக்கு முன்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடவுள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.