Advertisement
Advertisement
Advertisement

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய நிக்கோலஸ் பூரன்!

டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 8ஆயிரம் ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

Advertisement
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய நிக்கோலஸ் பூரன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 23, 2024 • 12:15 PM

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும்ம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அரிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 23, 2024 • 12:15 PM

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணியில் கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கைல் மேயர்ஸ் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை சேர்த்து அசத்தினர். 

Trending

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியிலும் ஜேசன் ராய் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் அரைசதம் கடந்து அசத்திய ஜேசன் ராய் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்களையும், இறுதிவரை ஆடமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 93 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 18.3 ஓவச்ர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய நிக்கோலஸ் பூரன் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் 66 ரன்களைச் சேர்த்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் பெருமைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். மேற்கொண்டு சர்வதேச அளவில் இந்த மைல் கல்லை எட்டும் 32ஆவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement