Advertisement

SL vs WI: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது.

Advertisement
Cricket Image for SL vs WI: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
Cricket Image for SL vs WI: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்! (Fabian Allen, Image Source: Twitter)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 08, 2021 • 02:56 PM

இலங்கை , வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இலங்கையில் நடைபெற்றது. நேற்று இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 08, 2021 • 02:56 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்து, விளையாடியது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சண்டிமல், ஆஷென் பண்டாரா இணை அதிராடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

Trending

இதனால் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சண்டிமல் 54 ரன்களையும், அஷென் பண்டாரா 44 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லிண்டல் சிம்மன்ஸ், எவின் லீவிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இறுப்பினும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

அதன்பின் ஆட்டத்தின் 19ஆவது ஓவரை எதிர்கொண்ட ஃபாபியன் ஆலன் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களை அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஃபாபியன் ஆலன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now