ஸ்லோ ஓவர் ரேட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.

Slow Over Rate: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த நான்கு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 29) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ள நிலையில் இந்த போட்டியிலும் ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்யும். மறுபக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆறுதல் வெற்றிக்காக போராடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி அணியின் கேப்டன் உள்பட பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அனைத்து வீரர்களுக்கும் போட்டி காட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் இந்த குற்றத்தை ஒப்புகொண்டதுடன் அபராதத்தையும் ஏற்றுக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இப்போட்டி குறித்து பேசினால் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 205 ரன்களைச் சேர்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணியானது 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now