
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 115 ரன்னும், மைக்கேல் லூயிஸ் 97 ரன்னும், அலிக் அதான்ஸ் 90 ரன்னும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைதொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதில் அதிகபட்சமாக ஜகர் அலி 53 ரன்னும், மொமினுல் ஹக் 50 ரன்னும் எடுத்தனர். விண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 181 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக அலிக் அதான்ஸ் 42 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 334 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்கலில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன, 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.