
West Indies recall Andre Russell for SA T20Is (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான 13 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் அதற்காக தயாராக வேண்டி இம்முடிவை எடுத்துள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.