Advertisement

முல்தான் சுல்தானில் ஹெட்மையர்; கலந்தர்ஸில் ரஷித் கான் - கலைக்கட்டும் பிஎஸ்ல் 2021!

ஒத்திவைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஜூன் மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிபி தெரிவித்துள்ளது.

Advertisement
West Indies' Shimron Hetmyer To Play For Multan Sultans In Remaining PSL 2021 Matches
West Indies' Shimron Hetmyer To Play For Multan Sultans In Remaining PSL 2021 Matches (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2021 • 09:22 PM

ஐபிஎல் தொடரைப் போன்றே பாகிஸ்தானின் உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2021 • 09:22 PM

மொத்தம் 34 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 14 போட்டிகள் மட்டுமே நடைபெற்றது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் அதிகரித்து வரும்  கரோனா தொற்றால் தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.

Trending

இதையடுத்து ஐபிஎல் தொடரை  போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து அதற்கான பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் பிஎஸ்எல் தொடரை அபுதாபியில் நடத்திக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் அபுதாபியில் உள்ள சேக் சயத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் பிஎஸ்எல் அணிகள் தங்கள் வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காகவும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரன் ஹெட்மையர் முல்தான் சுல்தான் அணியில் விளையாடுவதும் உறுதியாகவுள்ளன. 

இத்தகவலை சம்மந்தப்பட்ட அணிகளே உறுதிசெய்துள்ளன. மேலும் ஜூன் மாத இறுதிக்குள் ஒத்திவைக்கப்பட்ட பிஎஸ்எல் தொடர் நடைபெறும் என்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement