WI vs AUS, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
- இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் லூசியா
- நேரம் - அதிகாலை 5 மணி
போட்டி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ்
கிரேன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் போராடி தோற்றது.
அணியில் கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ரஸ்ஸல், ஹெட்மையர், பூரான் என அதிரடி வீரர்கள் மீண்டும் தங்களது ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே அந்த அணியால் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரை கைப்பற்ற முடியும்.
அதேசமயம் பந்துவீச்சில் டுவைன் பிராவோ, ஃபிடல் எட்வர்ட்ஸ் ஆகியோர் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் மற்ற பந்துவீச்சாளர்களும் தங்களது பணியை செய்யும் பட்சத்தில் வெற்றி வெஸ்ட் இண்டீஸ் பக்கமே.
ஆஸ்திரேலியா
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்மித் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின்றி இத்தொடரில் பங்கேற்கவுள்ளது.
ஆனாலும் மேத்யூ வேட், மிட்செல் மார்ஷ், ஹென்ரிக்ஸ், ஜோஷ் பிலீப் ஆகியோர் பயிற்சி ஆட்டங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளதால், நிச்சயம் எதிரணிக்கு சவாலளிப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், டேனியல் கிறிஸ்டியன், ஆண்ட்ரூ டை உள்ளிட்டோருடன் ஆடம் ஸாம்பாவும் அணியில் இடம்பிடித்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
நேருக்கு நேர்
மோதிய ஆட்டங்கள் - 11
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 6
ஆஸ்திரேலியா வெற்றி - 5
சாதனை தகவல்கள்
- இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 46 ரன்களை எடுக்கும் பட்சத்தில் 14 ஆயிரம் டி20 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.
- மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிரேன் பொல்லார்ட் 164 ரன்களை சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 11 ரன்களைக் கடக்கவுள்ளார்.
- ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் ஃபிஞ்ச் இத்தொடரில் 282 ரன்களை எடுக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10ஆயிரம் ரன்களை கடக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தேச அணி
வெஸ்ட் இண்டீஸ் - லெண்டல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கீரேன் பொல்லார்ட் (ஜே), ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, அகீல் ஹொசைன், ஓபெட் மெக்காய், ஃபிடல் எட்வர்ட்ஸ்
ஆஸ்திரேலியா - மேத்யூ வேட், ஆரோன் பிஞ்ச் (கே), ஜோஷ் பிலிப், ஆஷ்டன் டர்னர், டேனியல் கிறிஸ்டியன், ஆஷ்டன் அகர், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா, ரிலே மெரிடித்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், மேத்யூ வேட்
- பேட்ஸ்மேன்கள் - கீரேன் பொல்லார்ட், எவின் லூயிஸ், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் பிலிப், ஆரோன் பிஞ்ச்
- ஆல்ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், மிட்செல் மார்ஷ்
- பந்துவீச்சாளர்கள் - ஒபேட் மெக்காய், ஆடம் ஸாம்பா
Win Big, Make Your Cricket Tales Now