Advertisement
Advertisement
Advertisement

WI vs SA, 3rd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடைபெறுகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan June 29, 2021 • 16:12 PM
West Indies vs South Africa, 3rd T20I – Prediction, Fantasy Cricket XI Tips & Probable XI
West Indies vs South Africa, 3rd T20I – Prediction, Fantasy Cricket XI Tips & Probable XI (CRICKETNMORE)
Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸும், மற்றொன்றில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடைபெறுகிறது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம்: தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் ஜார்ஜ்
  • நேரம்: இரவு 11.30 மணி

போட்டி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் 

தென் ஆப்பிரிக்க அணியுடனான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தாலும், இரண்டாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது.
 
அதிலும் எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரஸ்ஸல், ஆண்ட்ரே ஃபிளட்சர் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்ததே வெஸ்ட் இண்டீஸின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் இனி வரும் போட்டிகளில் அவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஃபாபியன் ஆலன், டுவைன் பிராவோ ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால், இனி வரும் போட்டியிலும் அவர்களது பந்துவீச்சு எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவிலும் அபாரமாக விளையாடியது. 

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது. 

அதிலும் முதல் போட்டியில் சொதப்பிய  காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே ஆகியோர் நேற்றைய போட்டியில் மீண்டும் தங்களது ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. 

இதேபோல் இனிவரும் போட்டிகளிலும் இவர்கள் செயல்படும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணி டி20 தொடரையும் கைப்பற்றும் என நிபுணர்கள் கருதுகின்றனர். 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 12
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 5
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 7

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - ஆண்ட்ரே ஃபிளட்சர், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரெ ரஸ்ஸல், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஓபெட் மெக்காய், கெவின் சின்க்ளேர்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி கோக் , ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - ஆண்ட்ரே ஃபிளெட்சர், நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், டேவிட் மில்லர், ராஸி வான் டெர்-டுசென்
  • ஆல்ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், ஃபாபியன் ஆலன்
  • பந்து வீச்சாளர்கள் - காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement