
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்றது. இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது ரன் ரேட் அடிப்படையில் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது எதிவரும் மே 21ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது மே 30ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டனாக ஹீலி மேத்யூஸ் தொடர்கிறார். மேற்கொண்டு அணியின் துணைக்கேப்டனாக ஷமைன் காம்பேல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சினெல்லே ஹென்றி மற்றும் டியான்டிரா டோட்டின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனார். முன்னதாக இவர்கள் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.