
இந்திய அணிக்காக 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை யுவராஜ் ஹர்பஜன் கூட்டணி தோனி தலைமையில் வென்றது. தோனியை விட இந்திய அணியில் சீனியராக இருந்த யுவராஜ் சிங், இதுவரை அணிக்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்தியது இல்லை.
இது குறித்து பேட்டி ஒன்றில் யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேசிய ஹர்பஜன் சிங், “யுவராஜ் கேப்டனாக இருந்தால், நாங்கள் இந்திய அணியில் இருக்கும் போது சீக்கிரம் தூங்கி இருப்போம். அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருந்திருப்போம். யுவராஜ் ஒரு சிறந்த கேப்டனாக விளங்கி இருப்பார். அதற்கு அவர் நிகழ்த்திய சாதனைகளே சான்றாக இருந்திருக்கும்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் சிங் தான் வென்றார். அது எங்களுக்கு கவுரமான தருணம்” என்றார் . அப்போது யுவராஜ் கேப்டனாக இருந்தால், எந்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை காப்பாற்றப்பட்டு இருக்கும் என்றும் அந்தப் பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.