பேட்டிங் ஸ்டைல்களை புதிதாக கற்கவுள்ளேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 உலகக்கோப்பை தொடருக்காக முழு பேட்டிங் ஸ்டைலிலும் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் செட்டாகிவிட்டது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி என பலமாக உள்ளனர். ஆனால் மிடில் ஓவரில் முக்கிய பொறுப்பை சுமக்கவிருப்பது சூர்யகுமார் யாதவ் தான். ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்.
Trending
ஆஸ்திரேலிய களங்களில் பந்துகளுக்கு இயற்கையாகவே அதிக வேகமும், அதிக பவுன்ஸர்களும் கிடைக்கும். ஸ்லோவான பிட்ச்-களில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், மிக வேகமாக வரும் களங்களை எப்படி சமாளிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அவர் பேட்டிங் ஸ்டைலை மாற்றவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், “ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக களமிறங்கவுள்ளேன். ஆனால் அங்கு எப்படி ஆட வேண்டும், பந்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து ரோஹித்திடம் நிறைய கேட்டு தெரிந்துள்ளேன். அதிவேகமான, பவுன்ஸர்களான பிட்ச்-களில் எனக்கு விளையாட மிகவும் பிடிக்கும்.
இதற்காக பேட்டிங் ஸ்டைல்களை புதிதாக கற்கவுள்ளேன். ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களின் அளவு தான் பெரிய சவாலாக இருக்கும். அனைத்தும் பெரிய பவுண்டரிகளாக இருக்கும் என்பதால், ஸ்ட்ரைட் ஷாட்களை அடிக்க நிறைய கற்க வேண்டும். ஸ்ட்ரைட் ஷாட்களை அடிப்பதற்காக நிறைய ஷாட்களை கற்றுக்கொண்டு வருகிறேன். அதனை நிச்சயம் ஆட்டத்தின் போது வெளிப்படுத்துவேன்” எனக்கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now