
ஐபிஎல் 14ஆவது சீசனில் இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிலும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 3 இடங்களைப் பிடிக்க கடுமையான போட்டி நடந்து வருகிறது.
இதனால் நாளுக்கு நாள் ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பும் சுவரஸ்யமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில அணிகளில் விளையாடும் வீரர்கள் சரிவர விளையாடத போதிலும் அவர்களுக்கு ஏன் அணி நிர்வாகம் மீண்டும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கூ செயலியில் பதிவிட்ட ஆகாஷ் சோப்ரா, “அணிகள் வியர்வை சிதறாமல் ஒரு செயல்திறன் குறைந்த வீரரை வெளியே அமர வைக்கின்றன. அதுவும் சரியான விஷயம். ஆனால் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதற்கு சில வீரர்களை வெளியேற்ற ஒருசில அணிகள் ஏன் தயங்குகின்றன?. அதுவும் ஏலத்தில் அவர்களைத் தேர்ந்தெடுப்பது முதல், யார் விளையாடுவது என்பது வரை” என கேள்வி எழுப்பியுள்ளார்.