
வங்கதேச அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் துரதிஷ்டவமாக தோல்வியை தழுவியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0 என ஏற்கனவே இழந்தது. நியூசிலாந்துடனான தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, வங்கதேச அணியுடனான தொடரில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த சூழலில் மீண்டும் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் உள்ள போதும், அனைத்து முக்கிய வீரர்களும் இடம்பெறவில்லை. உதாரணத்திற்கு ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், பும்ரா, ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் என 11 இல் 3 - 4 வீரர்கள் மட்டுமே வழக்கமாக வரும் வீரர்கள் ஆகும். மற்ற அனைவரும் அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் ஆகும்.
இதில் அனைவருக்கும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ராஜட் பட்டிதார் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் சேர்க்கப்பட்டது தான். இஷான் கிஷான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோரெல்லாம் இருக்கையில் திடீரென அவர்கள் இரண்டு பேரையும் அணிக்குள் கொண்டு வந்ததிருந்தனர். அவர்களை பயன்படுத்தவும் இல்லை.