ரோஹித் சர்மா விளையாடாதது ஏன்? - சூர்யகுமார் யாதவ் பதில்!
கேகேஆருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாதது குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சைநடத்துகின்றன.
அதன்படி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துகிறார்.
Trending
மேலும் கேப்டன் ரோகித் சர்மா பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், “அவருக்கு வயிற்றில் ஏற்பட்டுள்ள சிறிய தொந்தரவு காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார் . முதல் இரண்டு போட்டிகளிலும் பெற்ற தோல்விக்கு பிறகு தற்போது தான் மும்பை அணி தனது வெற்றியை தூங்கி இருக்கிறது இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா வயிற்று வலி காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது இன்றைய போட்டியில் பின்னடைவாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
மேலும் இன்றைய போட்டியில் நீண்ட நாட்களாக மும்பை அணியின் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக போட்டியில் களம் இறங்க இருக்கிறார் . சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார் . அன்றிலிருந்து இதுவரை அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் அமர வைக்கப்பட்ட நிலையில் இன்று கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அர்ஜுன் டென்டல் கருக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது
Win Big, Make Your Cricket Tales Now