
Australia Test Team: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே நீக்கப்பட்டுள்ளதாக அந்த அணி தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சுழற்ச்சிகான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து அந்த அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளுமே சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த வாரம் பார்படோஸில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரில் மிகப்பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் ஃபார்மில் இல்லாத மார்னஸ் லாபுசாக்னே நீக்கப்பட்டார்.