
West Indies: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ் போட்டி நடுவர்களின் தரநிலைகள் குறித்து கடும் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றர்.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ், “இந்த போட்டி எனக்கும் அணிக்கும் வெறுப்பூட்டும் ஒன்றாக அமைந்தது, ஏனென்றால் நாங்கள் ஆஸ்திரேலியாவை ஒப்பீட்டளவில் குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் செய்தோம். நாங்கள் அதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அதன்பின் பின்னர் விளையாட்டில் பல சந்தேகத்திற்குரிய நடுவர்களின் தீர்ப்புகள் வந்தன, அவற்றில் எதுவும் எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை.