
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முதலிரண்டு போட்டியின் முடிவிலும் வங்கதேச அணியானது வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்டில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இத்தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த லிட்டன் தாஸ் இப்போட்டியிலும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 களமிறங்கிய தன்ஸித் ஹசனும் 9 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தன்ஸித் ஹசனும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் மிராஸ் - ஜக்கார் அலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெஹிதி ஹசன் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜக்கார் அலி அரைசதம் கடந்ததுடன் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது.