WI vs ENG, 1st ODI: இங்கிலாந்து ரன் குவிப்பு; வெஸ்ட் இண்டீஸுக்கு கடின இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஜேக்ஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிலிப் சால்ட் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த பென் டக்கெட்டும் 20 ரன்களில் நடையைக் கட்டினார்.
Trending
இதையடுத்து இணைந்த ஸாக் கிரௌலி - ஹாரி ப்ரூக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். பின் ஸாக் கிரௌலி 48 ரன்களில் ரன் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 3 ரன்களுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 17 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுப்பக்கம் அரைசதம் கடந்து விளையாடிய ஹாரி ப்ரூக் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 71 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சாம் கரண் - பிரைடன் கார்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாம் கரண் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்கள் எடுக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரைடன் கார்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 31 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் ரொமாரியோ செப்பெர்ட், குடகேஷ் மோட்டி, ஒஷேன் தாமஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now