
West Indies vs England 1st ODI Dream11 Prediction: இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நாளை (அக்டோபர் 31) ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் படுதோல்வியைச் சந்தித்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுமே தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்த தொடரில் விளையாட இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.