
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி மிக சிறந்த முறையில் விளையாடிய ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது, மேலும் அதனை ஒட்டி நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.
இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் என்று கூறலாம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர்.ஆனால் பந்துவீச்சில் அனைவரும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர்.
குறிப்பாக எட்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரி என்ட்ரி கொடுத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான நிக்கோலஸ் பூரான் மற்றும் சிம்ரோன் ஹெட்மைர் ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.