Advertisement

இந்திய அணியில் ரிங்கு சிங்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரின் போது கலக்கிய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement
WI vs IND: Rinku Singh is set to be picked for West Indies T20I!
WI vs IND: Rinku Singh is set to be picked for West Indies T20I! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 26, 2023 • 01:24 PM

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் 12ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்றாவதாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. ஆனால் இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 26, 2023 • 01:24 PM

இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு குறித்து ரசிகர்களுக்கு சுவாரசியமான எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களான ஜெயஸ்வால், ரிங்கு சிங், ருதுராஜ், திலக் வர்மா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

Trending

இவர்களிலிருந்து யார் யார் இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெறுவார்கள்? இவர்கள் உள்ளே வந்தால் யார் வெளியே செல்வார்கள்? ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் டி20 அணிக்கு கேப்டனாக வருவாரா? மூத்த நட்சத்திர வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பதெல்லாம் பெரிய கேள்விகளாக இருக்கிறது. இந்நிலையில் கடைசியாக ஒரு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.

வெளியான அந்தத் தகவலில் ரிங்கு சிங் இந்திய அணியில் முதல்முறையாக வாய்ப்பு பெற இருப்பதாகவும், மேலும் ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் வாய்ப்பு பெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாக விராட் கோலிக்கும் இந்தத் தொடரில் இடமில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

அடுத்ததாகப் பும்ரா இல்லாத நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சில் முக்கியமானவராக இருக்கும் முகமது ஷமிக்கு மொத்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் ஓய்வு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்திய டி20 கிரிக்கெட் அணி மூத்த நட்சத்திர வீரர்களை யாரையும் சேர்க்காமல் இளம் வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட இருப்பதாகத் தெளிவாகத் தெரிகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement