
WI vs PAK, 3rd T20I: West Indies have won the toss and have opted to bat (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. மழை காரணமாக இப்போட்டியின் டாஸ் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் செர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராவூப் இடம்பிடித்துள்ளார்.