-lg1-mdl.jpg)
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பிராண்டன் கிங் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பிராண்டன் கிங்குடன் இணைந்த கைல் மேயர்ஸும் அதிரடியாக விளையாட அணியின்ன் ஸ்கோரு மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமாக விளையாடிய பிராண்டன் கிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேலும் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்னர்ஷிப்பும் அமைத்தனர்.