
WI vs SA, 2st T20: West Indies have won the toss and have opted to field (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 27) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கீரென் பொல்லார்ட் முதலில் பந்து வீசத் தீர்மானித்துள்ளார். இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் உள்ளதால், இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.