
ஐபிஎல் தொடரில் இன்ற் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலிலும் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஷுப்மன் கில், “இந்த விக்கெட்டில் ஆரம்பத்திலிருந்தே ரன்களைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அதனால் ஏதெனும் ஒரு பேட்டர் 17-18 ஓவர்கள் விளையாடினால் 200-220 ரன்களைச் சேர்க்க முடியும் என்று பேசி இருந்தோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் சரியான ஸ்கோரை எட்டமுடியவில்லை.