கிளன் மேக்ஸ்வெல் மகத்தான இன்னிங்ஸ் விளையாடியுள்ளார் - ரிக்கி பாண்டிங்!
டேவிட் வார்னர், மார்ஷ் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம் வாம்பிழுத்ததே இந்த சரவெடிக்கு காரணம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் 292 ரன் இலக்கை சேசிங் செய்த ஆஸ்திரேலிய அணி 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து 8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில் ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் இரட்டை சதம் (201 ரன்) அடித்து அசத்தினார்.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் சில கேட்ச்களை தவற விட்டதை விட ரஷித் கான் போன்ற சில ஆப்கானிஸ்தான் வீரர்கள் டேவிட் வார்னர், மார்ஷ் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம் வாம்பிழுத்ததே இந்த சரவெடிக்கு காரணம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக சீண்டினால் ஆஸ்திரேலியர்கள் சும்மா விடமாட்டார்கள் என்ற குணத்தை அறியாமல் ஆப்கானிஸ்தான் எழுச்சியை காட்டியதாக தெரிவிக்கும் அவர் இனிமேல் தாமே நினைத்தாலும் மீண்டும் அடிக்க முடியாத அளவுக்கு கிளன் மேக்ஸ்வெல் மகத்தான இன்னிங்ஸ் விளையாடியதாகவும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த பல வருடங்களாக விளையாடி கிரிக்கெட்டில் இருக்கும் நான் இது போன்றவற்றை பார்த்ததில்லை. சொல்லப்போனால் இது போன்ற நிகழ்வு மீண்டும் நடந்தால் நான் ஆச்சரியப்படுவேன். ஏனெனில் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியினர் ஆஸ்திரேலியர்களிடம் எழுச்சியை காண்பிக்க முயற்சித்தனர். அதற்காக அவர்கள் வாய்மொழியாக சிலவற்றையும் சொன்னார்கள். அவர்களிடம் பாடி லாங்குவேஜும் சிறப்பாக இருந்தது.
அவர்கள் முடிந்தளவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தை கொடுக்க முயற்சித்தனர். இருப்பினும் சில கேட்ச்களை தவற விட்டதை பயன்படுத்திய மேக்ஸ்வெல் எஞ்சியவற்றை வரலாற்றாக மாற்றியுள்ளார். இந்த இன்னிங்ஸ் பற்றி நாம் நீண்ட காலம் பேசுவோம். ஏனெனில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 0.3% மட்டுமே வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருந்தது. அந்தளவுக்கு மேக்ஸ்வெல் மிராக்கிள் இன்னிங்ஸ் விளையாடினார். கமின்ஸ் – மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பேசி சிறப்பாக விளையாடினார்கள்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now