டெவால்ட் பிரீவிஸுக்கு லெவனில் இடம் கிடைக்குமா? - ஸ்டீபன் ஃபிளெமிங் பதில்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் பிரீவிஸ் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Also Read
இந்நிலையில் இப்போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் லெவனில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலேயே டெவால் பிரீவிஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங், "நாங்கள் பரிசீலிக்கும் விருப்பங்களில் அவரும் ஒருவர். இத்தொடர் முழுவதும் எங்களுடன் இருந்த மற்ற வீரர்களும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பிரெவிஸ் அணியில் ஒரு நல்ல சேர்க்கை, ஆனால் எங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் வீரர்களைக் கருத்தில் கொண்டு, சிறந்த அணியாக இருக்கும் என்று நாங்கள் நினைப்பதை நிர்வகிக்க வேண்டும்.
மேலும் பிரெவிஸ் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் பார்க்க வேண்டும். எனவே அது விவாதத்தின் ஒரு பகுதியாகும். ஐபிஎல் தொடர் கடினமானது. வீரர்கள் 20, 30 ரன்களில் தொடக்கத்தை எடுக்கிறார்கள், ஆனால் நாங்கள் அவற்றை பெரிய ஸ்கோர்களாக மாற்றவில்லை. எனவே பேட்டிங் வரிசை சரியாகப் பொருந்தவில்லை, மேலும் இந்த ஆண்டு எங்கள் "கௌரவப் பலகைக்கு" தகுதியான ஒரு செயல்திறன் கூட எங்களுக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், ஆயுஷ் மாத்ரே, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, டெவால்ட் பிரீவிஸ், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
Win Big, Make Your Cricket Tales Now