X close
X close

பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் - சௌரவ் கங்குலி!

இந்த தொடரில் கோலி சதமடிப்பது மட்டும் பெரிய விஷயமாக இருக்கப் போவதில்லை. பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 16, 2022 • 17:55 PM

கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்திய அணி ஐபிஎல் 15ஆவது சீசனுக்குப் பிறகு அட்டகாசமாக விளையாடி வருவதால், ஆசியக் கோப்பையிலும் கெத்துக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்த அணியில் ஒரேயொரு பிரச்சினை மிகமுக்கியமானதாக இருக்கிறது. அது விராட் கோலியின் ஃபார்ம்தான். ஐபிஎல் 15ஆவது சீசனில் கோலி சிறப்பாக செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடர்களில் மட்டுமே பங்கேற்ற அவர், அதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடுத்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின்போது ஓய்வுக்கு சென்றார்.

Trending


அப்படி கோலி தனது திறமையை நிரூபிக்காமல் ஓய்வுக்கு சென்றிருப்பதால், ஆசியக் கோப்பையில் அவர் எப்படி விளையாடப் போகிறாரோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஒருவேளை கோலி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்பினால், அடுத்து பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் கோலியின் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி பேசியுள்ளார். அதில், “விராட் கோலியை அழுத்தங்கள் இல்லாமல் பயிற்சி செய்ய விடுங்கள். கோலியின் பார்ம் குறித்து பேசிபேசி அவருக்கு நெருக்கடியைக் கொடுக்க வேண்டாம். அவர் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அற்புதமான வீரர். தற்போதைய சூழலை வைத்து பார்க்கும்போது ஆசியக் கோப்பையின் மூலம் கோலி பார்முக்கு திரும்புவார் என நம்புகிறேன்.

இந்த தொடரில் கோலி சதமடிப்பது மட்டும் பெரிய விஷயமாக இருக்கப் போவதில்லை. பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம். அவர் பார்முக்கு திரும்பிவிட்டால், யாராலும் அவரை தடுத்து நிறுத்த முடியாது” எனக் கூறினார். கங்கிலியின் இந்த பேட்டியை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


Win Big, Make Your Cricket Tales Now