
ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அந்த அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் வில் புக்கோவ்ஸ்கி. மேலும் அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து அவரது இடத்தை நிரப்பும் வீரர்களில் ஒருவராகவும் வில் இருந்தார்.
இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, அவரது தலையில் பந்து தாக்கியதன் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறும் சூழல் உருவானது. அதன்படி ஒரு பயிற்சி ஆட்டத்தின்போது, வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்தனது வில் புக்கோவ்ஸ்கி தலையில் பன்பயங்கரமாக தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் மைதானத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ பரிசோதனையின் முடிவில் வில் புக்கோவ்ஸ்கி பந்து தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள சில காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மருத்து காரணங்களால் வில் புக்கோவ்ஸ்கி தனது ஓய்வை அறிவித்திருந்தார்.