
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்ட நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியாமல் லீக் சுற்றுடனே தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வந்த நியூசிலாந்து அணியானது இந்த முறை லீக் சுற்றுடனே வேளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இத்தோல்விக்கு பொறுப்பேற்று நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்திலிருந்தும் தன்னை விடுவித்துகொண்டு, இனி சாதாரன வீரராகவே விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்கவும் தயாராக உள்ளேன்.