
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் ஆஸ்திரேலிய அணி கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இம்முறையும் வெற்றி பெறுவதுடன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தென் ஆப்பிரிக்காவை நிறைய பேர் விமர்சித்திருக்கிறார்கள், இது உண்மையில் நியாயமில்லை. ஏனெனில் நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அட்டவணையின் படியே விளையாடுகிறீர்கள்.