
WIPL 2022: Velocity beat Supernovas by 7 wickets (Image Source: Google)
மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் - வெலாசிட்டி அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுரின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரித் கவுர் 71 ரன்களைச் சேர்த்தார். வெலாசிட்டி தரப்பில் கேட் கிராஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.