
டி20 உலக கோப்பை வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சி போட்டிகளில் விளையாடி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு மும்முரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் மிக வலுவாக இருப்பதால், டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது. அஸ்வின், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல் என ஸ்பின் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. ஆனால் பும்ரா இல்லாததால் வேகப்பந்துவீச்சு யூனிட் தான் பலவீனமாக உள்ளது.