
மகளிர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டெக்வொர்த் லூயிஸ் முறப்படி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் ஒருநாள் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் வழங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இதில் 27 ரன்களைச் சேர்த்திருந்த லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்க, 57 ரன்களில் தஸ்மின் பிரிட்ஸும் ஆட்ட்மிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் நதிண்டி கிளார்க் 42 ரன்களையும், சுனே லூஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கரிஷ்ம ராம்ஹராக் மற்றும் ஆலியா அலீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.